தாய்லாந்து வளைகுடாவில் போர்க்கப்பல் மூழ்கியதில் 31 மாலுமிகளை காணவில்லை!

தாய்லாந்தில் போர்க்கப்பல் மூழ்கியதில் 31 மாலுமிகளை காணவில்லை 100க்கும் மேற்பட்ட மாலுமிகளை ஏற்றிச் சென்ற கப்பல் வளைகுடாவில் புயலில் சிக்கியதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இதுவரை 75 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், 31 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்து 12 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டதாகவும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கடற்படை செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், “கப்பலில் தண்ணீர் புகுந்ததால் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ராணுவ…

மேலும்...

ஷாஜியா மாரி இந்தியாவுக்கு மிரட்டல்!

இஸ்லாமாபாத் (18 டிச 2022): பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஷாசியா மாரி இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதப் போர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோவின் கருத்துக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்ததை அடுத்து பாகிஸ்தானில் இருந்து மீண்டும் மிரட்டல் வந்துள்ளது. “பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதை இந்தியா மறந்துவிடக் கூடாது. நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். தேவை ஏற்பட்டால், திரும்பிப் பார்க்காமல் செயல்படுவோம்’ என்று ஷாஜியா தெரிவித்துள்ளார். அதே…

மேலும்...

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நகரங்களில் உலகில் துபாய் இரண்டாமிடம்!

துபாய் (17 டிச 2022): சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நகரங்களில் உலகில் துபாய் இரண்டாவது இடத்தில் உள்ளது. uromonitor International இன் 2022 ஆம் ஆண்டின் சிறந்த 100 சுற்றுலா நகரங்களின் பட்டியலில் பாரிஸ் முதலிடத்திலும், துபாய் இரண்டாமிடத்திலும் உள்ளது. முதல் பத்து பட்டியலில் உள்ள மற்ற நகரங்கள் ஆம்ஸ்டர்டாம், மாட்ரிட், ரோம், லண்டன், முனிச், பெர்லின், பார்சிலோனா மற்றும் நியூயார்க். அதேவேளை சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் கவர்ச்சிகரமான நகரமாக துபாய் முதலிடத்தில் உள்ளது. நிதித்துறை, வணிகத்…

மேலும்...

அமெரிக்காவின் டெக்ஸாஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

டெக்ஸாஸ் (17 டிச 2022 )டெக்ஸாஸ் அமெரிக்காவின் டெக்சாஸில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவானது. டெக்சாஸ் வரலாற்றில் இது மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகும். மேற்கு டெக்சாஸில் வெள்ளிக்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 5.35 மணியளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும், உயிரிழப்பு அல்லது வேறு சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. டெக்சாஸ் வரலாற்றில் இது மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகும். அதேபோல…

மேலும்...

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

தைபே (16 டிச 2022): தைவானில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று அங்கு கிழக்கு கடலோரப்பகுதியில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவானது. இந்த நில நடுக்கம் 12 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது. பொதுவாக 6 புள்ளிகளுக்கு மேற்பட்ட நில நடுக்கங்கள் ஆபத்தானவை என்றபோதிலும், அது எங்கு தாக்குகிறது, எந்தளவு ஆழத்தில் மையம் கொள்கிறது என்பதைப் பொறுத்தது. நேற்றைய…

மேலும்...

சவூதி சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை!

ரியாத் (13 டிச 2022): குளிர்காலம் கடுமையாக இருப்பதால் சவுதி சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களை விட இம்முறை சவூதியில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நோய்கள் அதிகரிக்கும் எனவும் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது அல் அப்துல் அலி கூறினார். தடுப்பூசி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் எடுக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. சவுதி அரேபியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு வானிலை தொடர்பான நோய்களின்…

மேலும்...

யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவை மீண்டும் தொடக்கம்!

கொழும்பு (12 டிச 2022): யாழ்ப்பாணம் – சென்னை இடையேயான விமான சேவையை இலங்கை மீண்டும் தொடங்கியுள்ளது. கோவிட் பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட விமானச்சேவை, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் மீண்டும் தொடங்கப் பட்டுள்ளது. இலங்கை விமான நிலைய அதிகார சபையின் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு அலையன்ஸ் ஏர் வாரத்திற்கு நான்கு முறை செயல்படும். சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும் யாழ்ப்பாண விமான நிலைய ஓடுபாதை மேம்படுத்தப்பட வேண்டும். தற்போது 75…

மேலும்...

சவூதியில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ரியாத் (12 டிச 2022): சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு முதல் வியாழன் வரை மிதமானது முதல் பலத்த மழை, இடி, காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரியாத், ஜித்தா, மக்கா, மதீனா, தாயிப் என அனைத்து பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை எச்சரிக்கை காரணமாக ஜித்தா, ராபிக் மற்றும் குலைஸ் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக…

மேலும்...

வாட்ஸ் அப்பில் அறிமுகமாகும் புதிய வசதி!

புதுடெல்லி (11 டிச 2022): வாட்ஸ் அப்பில் புதிய வசதியை அறிமுகப் படுத்தவுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள தனக்குத்தானே செய்தி அனுப்பிக் கொள்ளும் வசதியை தற்போது கணினி பயன்பாட்டிற்கும் விரிவுபடுத்தப் படவுள்ளது. அதேபோல ஒரு செய்தியை ஒரு முறை மட்டுமே வாசிக்கும் வகையிலும் புதிய அம்சம் அறிமுகப் படுத்தப்படவுள்ளது. இது விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது.

மேலும்...

மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி எடுத்துச் செல்ல தடை!

கொழும்பு (11 டிச 2022): இலங்கையில் மாட்டிறைச்சி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குளிர் காலத்தில் மாடுகள் மற்றும் ஆடுகள் பலியாவதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும்...