நகர்வலம் - சினிமா விமர்சனம்!

ஏப்ரல் 25, 2017 907

பிரம்மாண்டங்களுக்கு மத்தியில் சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளியாகியிருக்கும் படம் நகர்வலம்.

பாலாஜி சென்னையில் தண்ணீர் லாரி ஓட்டி வருபவர், இவருடன் யோகிபாபு, பாலசரவணன் ஆகியோர் இருக்க, பாலாஜிக்கு ஹீரோயின் தீக்‌ஷாவை பார்த்தவுடன் காதல்.

அவருக்கு இளையராஜா பாடல் பிடிக்கும் என்பதால், அதை லாரியில் ஒலிப்பரப்பியே கவர்கின்றார், இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்க, அதற்குள் இந்த விஷயம் தீக்‌ஷா வீட்டிற்கு தெரிகின்றது.

இதனால் கோபமான தீக்‌ஷாவின் சித்தப்பா பாலாஜியை கொல்ல தன் மகன் முத்துக்குமாரை அனுப்புகின்றார். முத்துக்குமார் பாலாஜியை கொன்றாரா? இல்லை இவர்கள் காதலை சேர்த்து வைத்தாரா? என்பதே மீதிக்கதை.

பாலாஜி காதல் சொல்ல வந்தேன் என்ற படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பிறகு நடிக்க வந்துள்ளார், ஆனால், அதே கலகலப்பான நடிப்பு அவரை விட்டு போகவே இல்லை, தன் நடிப்பை நிறைவாக செய்துள்ளார்.

அதேநேரத்தில் யோகிபாபு, பாலசரவணனும் தங்கள் கதாபாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர். ஹீரோயினின் அண்ணனாக வரும் முத்துக்குமார் சிறப்பாக நடித்துள்ளார்.

ஆனால், பாலாஜிக்கு இன்னமும் கொஞ்சம் அழுத்தமான கதாபாத்திரமாக அமைத்திருக்கலாம் என நினைக்க வைக்கின்றது. படத்தில் பாதிநேரம் இளையராஜாவின் இசை தான், காப்பி ரைட்ஸ் வாங்கினார்களா? தெரியவில்லை.

வேகம் குறைவு

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...