வைரலாகப் பரவும் பிக்பாஸ் நடிகையின் ஆபாசப்படம்

நவம்பர் 08, 2017 2521

சென்னை(08 நவ 2017): இணையத்தில் நடிகை அனுயாவின் ஆபாசப் படம் வைரலாகும் நிலையில் நீக்கக்கோரி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் சினிமா நட்சத்திரங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய ஆபாசப் படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம், நண்பன் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவரும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்குபெற்றவருமான நடிகை அனுயாவின் ஆபாசப் படம் இணையத்தில் பரவியது.

இதுகுறித்து போலீசில் அனுயா அளித்துள்ள புகாரில், சமூகவலை தளத்தில் மார்பிங் செய்யப்பட்ட எனது ஆபாச படம் பரவி வருகிறது. இது எனது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே அந்த ஆபாச படத்தை டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Viral in internet big boss anuya's nude picture

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...