ரெயிலில் பிரபல நடிகையுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் கைது!

பிப்ரவரி 02, 2018 840

திருவனந்தபுரம் (02 பிப் 2018): ரெயிலில் பிரபல நடிகை சனுஷாவுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருபவர் சனுஷா(23). அவர் நேற்று கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரயிலில் சென்றுள்ளார். ஏசி பெட்டியில் அப்பர் பெர்தில் இரவில் தூங்கியுள்ளார். அப்போது யாரோ ஒருவர் சனுஷாவின் உதட்டை தடவியுள்ளார். இதனால் திடுக்கிட்டு விழித்த சனுஷா சத்தமிட்டுள்ளார். உடனே அடுத்த கம்பார்ட்மென்ட்டில் இருந்த திரைக்கதை எழுதும் உன்னி மற்றும் ரஞ்சித் என்ற பயணி மட்டும் உதவிக்கு வந்துள்ளனர்.

அவர்கள் சென்று டிடிஆரை அழைத்து தகவல் கொடுத்து ரெயில்வே போலீசுக்கும் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து அடுத்த ரெயில் நிலையத்தில் சனுஷாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் கைது செய்யபப்பட்டார்.

கைதானவர் கன்னியாகுமரியை சேர்ந்த ஆன்டோ போஸ்(40) என்பதும், அவர் தங்க நகைகள் தயாரிப்பவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

 

Showing courage and presence of mind, a 23-year-old actress stood up to a man who she says tried to molest her on a train and held on to the accused till help finally arrived. The incident happened in the early hours of today in two-tier air-conditioned coach of the Maveli Express that runs between Kannur and Thiruvananthapuram.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...