நடிகை ஸ்ரீதேவி துபாயில் திடீர் மரணம்!

பிப்ரவரி 25, 2018 1176

துபை(25 பிப் 2018): பிரபல பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 54.

ஸ்ரீதேவி அவரது கணவர் போனிகபூர் மற்றும் அவரது மகள் குஷியுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு துபை சென்றிருந்தார். இந்நிலையில் அங்கு மாரடைப்பால் அவர் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியை சொந்த ஊராக கொண்டவர் ஸ்ரீதேவி.இவர் 4 வயதிலேயே திரைப்படத் துறையில் நுழைந்தவர். தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் முருக கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்தார்.

தமிழ். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர். தமிழில் 16 வயதினிலே, மூன்றாம் பிறை, மீண்டும் கோகிலா, பிரியா, சிவப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு உள்ளிட்ட படங்கள் அவரின் நடிப்புக்கு மகுடம் அமைத்தவை.

அதனை தொடர்ந்து இந்தியில் புகழ் பெற்ற ஸ்ரீதேவி தமிழுக்கு முழுக்கு போட்டார். 1997ல் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவி அதற்குப் பிறகு அவர் சினிமாவில் நடிக்கவில்லை பின்பு 2012 இங்கிலீஷ் விங்கிலீஷ் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தமிழில் விஜய் நடித்த புலி மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார்.

இந்நிலையில் அவரது திடீர் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Veteran actor Sridevi died in Dubai on Saturday after a cardiac arrest. She was 54.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...