ஸ்ரீதேவி மறைவு செய்திக்கு முன்பே அமித்தாப் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

February 25, 2018
பகிருங்கள்:

மும்பை(25 பிப் 2018): நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில் இந்தி நடிகர் அமித்தாப் பச்சன் வெளியிட்ட தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

நேற்றிரவு துபாய் நேரப்படி 11.30 மணியளவில் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீதேவி மறைவு செய்தி இந்திய நேரப்படி 3 மணியளவில்தான் ஊடகங்களில் வெளியானது.

ஆனால் நேற்றிரவு 1.15 மணியளவில் நடிகர் அமிதாப் பச்சன் தன் டிவிட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார். அதில், "ஏதோ தப்பா படுது.. வித்தியாசமான பதட்டம் நிலவுகிறது.. ஏன் என்று தெரியவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். அவர் ட்வீட் செய்த அடுத்த சில நிமிடங்களில் ஸ்ரீதேவி மறைவு செய்தி வெளியானது. இதனையடுத்து அமிதாப் பச்சனின் ட்விட்டர் பதிவை நெட்டிசன்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையே ஸ்ரீதேவியின் மறைவுக்கு அவரது சக நடிகர்களான் கமல், ரஜினி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!