சந்தேகத்தை எழுப்பும் நடிகை ஸ்ரீதேவி மரணம்!

பிப்ரவரி 26, 2018 1408

மும்பை(26 பிப் 2018): மறைந்த நடிகை ஸ்ரீதேவி மயங்கிய நிலையில் ஹோட்டல் கழிவறையில் கண்டெடுக்கப்பட்டதால் அவரது மரணம் எப்படி நடந்தது? என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.

துபாயில் திருமண நிகழ்ச்சிக்காக சென்ற ஸ்ரீதேவி மாரடைப்பால் இறந்ததாக அவரது குடும்பத்தினர் நேற்று தெரிவித்தனர். இதற்கிடையே நடிகை ஸ்ரீதேவி கழிவறைக்குச் சென்று சுமார் 15 நிமிடங்களாகியும் வெளியே வராததாலும் அழைத்தும் பதில் இல்லாமல் இருந்ததால் கதவை உடைத்து சோதனை செய்தபோது கழிவறையில் அவர் மயங்கிய நிலையில் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார்.

பின்பு காவல்துறையினருக்கும், மருத்துவர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் எப்போது எங்கு இறந்தார்? என்ற தகவல் உறுதியாக இல்லை. மேலும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து தன்னை ஆரோக்கியமாக வைத்துக்கொண்ட ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு வர வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே ஸ்ரீதேவியின் தடவியல் பரிசோதனை அறிக்கை தாமதமாவதாலேயே உடலை மும்பை கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலம் மும்பை கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

The Chandni-fame star then went to the washroom. After 15 minutes passed and Sridevi did not come out, Kapoor knocked on the door to check on her. When he got no response, he forced open the door to find the legendary actor lying motionless in the bathtub full of water. "He tried to revive her and when he could not, he called a friend of his. After that, he informed the police at 9pm," said the source.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...