நடிகை ஸ்ரீதேவி மரண தடவியல் அறிக்கையில் திடீர் திருப்பம்!

பிப்ரவரி 26, 2018 1334

துபை(26 பிப் 2018): நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பான தடவியல் அறிக்கையில் அவர் நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்ஃப் நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், துபாய் போலீஸ் வெளியிட்ட நடிகை ஸ்ரீதேவி உடலின் தடயவியல் அறிக்கையானது அவரது குடும்பத்தினருக்கும், இந்திய தூதரகத்திற்கும் வழங்கப்பட்டது. ஸ்ரீதேவி மது அருந்தியிருந்ததாகவும், மேலும் அவர் தங்கியிருந்த அறையின் குளியலறையில் மயங்கி விழுந்ததை தொடர்ந்து தண்ணீர் தொட்டியில் மூழ்கி அவர் உயிரிழந்தார் எனவும் தெரிவித்துள்ளது.

முதலில் மாரடைப்பால் மரணமடைந்ததாக ஸ்ரீதேவி குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்நிலையில் தடவியல் அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே ஸ்ரீதேவியின் உடல் திங்கள்கிழமை மாலை மும்பை கொண்டுவரப்படலாம் என்றும் செவ்வாய்க்கிழமை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Bollywood actor Sridevi died of accidental drowning in her hotel bath tub after losing consciousness, the Dubai government said on Monday, giving a dramatic twist to her sudden death that has stunned legions of fans and industry colleagues.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...