ஸ்ரீதேவியின் உடலை ஒப்படைப்பதில் தாமதம் - கணவரிடம் துபாய் போலீஸ் விசாரணை!

February 27, 2018
பகிருங்கள்:

துபாய்(27 பிப் 2018): துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரிடம் துபாய் போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.

துபாயில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக துபாய்க்கு சென்றிருந்த ஸ்ரீதேவி தனது கணவருடன் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து இரவு விருந்துக்கு செல்வதற்காக தயாராகியிருந்தபோது ஹோட்டல் பாத்ரூமில் மயங்கி இறந்து கிடந்தார். அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக முதலில் கூறப்பட்டது.

ஆனால் தடவியல் அறிக்கையில் அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும் நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்றும் அவரது ரத்தத்தில் மதுபானம் கலந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருமணம் முடிந்ததும் போனி கபூர் மட்டும் மும்பை சென்றுவிட்டு உடனடியாக மீண்டும் துபாய் வந்தது ஏன்? என்று போலீசார் போனி கபூரிடம் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது.

இதனால் ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!