கமல் ஹாசன் மீதான குற்றச்சாட்டுகள் உண்மைதான் - கவுதமி விளக்கம்!

பிப்ரவரி 27, 2018

சென்னை(27 பிப் 2018): நடிகர் கமல் தனக்கு சம்பள பாக்கி வைத்துள்ளது குறித்து வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாங்கள் உள்ளன என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலுடன் திருமணமாகாமலேயே வாழ்க்கை நடத்திய கவுதமி திடீரென அவருடன் இருந்த தொடர்பை துண்டித்தார். அவர்களது நட்பு ஏற்கனவே சர்ச்சையாக பேசப்பட்டு வந்த நிலையில் அவர்களது பிரிவு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கமலுடன் இணைந்து செயல்பட்டபோது அவருடைய ராஜ்கமல் பட நிறுவனத்துக்காக ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினேன். வேறு பட அதிபர்கள் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்தேன். அதன்மூலம் எனக்கு வருமானம் வந்தது.

கமல்ஹாசன் நடித்துள்ள தசாவதாரம், விஸ்வரூபம் படங்களிலும் பணியாற்றினேன். ஆனால் அந்த படங்களுக்கு எனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை இன்னும் தரவில்லை. அந்த பணம் எனது வாழ்க்கைக்கு முக்கியமானதாக இருக்கிறது. சம்பள பாக்கியை வசூலிக்க பல முறை முயன்றும் கிடைக்கவில்லை என தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே கவுதமியின் குற்றச்சாட்டை கமலின் ராஜ்கமல் நிறுவனம் மறுத்துள்ளது. விஸ்வரூபம்’ படத்தில் பணியாற்றியதற்காக கவுதமிக்கு கொடுக்க வேண்டிய முழு சம்பளமும் கொடுக்கப்பட்டுவிட்டது என்றும், தசாவதாரம் நாங்கள் தயாரித்த படம் அல்ல என்றும் அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நடிகை கவுதமி கமலை விட்டு பிரிந்தபோது அமைதியாக இருந்துவிட்டு இப்போது திடீரென கமல் மீது குற்றச்சாட்டு வைப்பது ஏன்? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!