கபாலி படத்தை வெளியிட்டவர் தற்கொலை மிரட்டல்!

மார்ச் 03, 2018 894

சென்னை (03 மார்ச் 2018): கபாலி திரைப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடையே பேசிய விநியோகஸ்தர் செல்வகுமார் என்பவர், " கபாலி திரைப்படத்தை வெளியிட தாணுவிடம் ரூ 5 கோடியே 50 லட்சம் கொடுத்ததாகவும் அதன் பிறகே கபாலி திரைப்படத்தை வெளியிட உரிமை கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் கபாலி வெளியிட்டதில் ரூ 2 கோடியே 72 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தாணுவிடம் இதுகுறித்து எடுத்துக்கூறி ஆனால் அவர் அதனை கண்டுகொள்ள வில்லை என்பதால் நானும் கடன் தொல்லையால் அவதியுறுகிறேன். எனவே தாணு ஒப்புக்கொண்ட நஷ்ட தொகையை தரவில்லையெனில் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சென்னை முழுவதும், "கபாலி நஷ்டத்தை சரிசெய்ய முடியாத ரஜினி மக்களை எப்படி காப்பாற்றுவார்?" என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...