ரஜினியின் 2.0 டீசர் இணையத்தில் லீக் - படக்குழுவினர் அதிர்ச்சி!

March 04, 2018
பகிருங்கள்:

சென்னை (04 மார்ச் 2018): ரஜினியின் 2.0 பட டீசர் இணையத்தில் லீக் ஆகியுள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.O படம் காலாவுக்கு முன்பே தொடங்கப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப வேலை காரணமாக பட வெளியீடு தள்ளிப்போகிறது.

இதனால் காலா வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் டீசர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியானது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் டீசர் இணையதளங்களில் லீக் ஆகியுள்ளது. டீசர் முடிவில் ரஜினிகாந்த் கண்ணாடியை இறக்கி குக்கூ என கூறுவது போல் காட்சி இடம் பெற்றுள்ளது.

அதிகாரப்பூர்வ வெளியீடுக்கு முன்பே 1.27 நிமிடம் கொண்ட டீசர் வெளியாகி உள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!