ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி!

மார்ச் 05, 2018

லாஸ் ஏஞ்சல்ஸ் (05 மார்ச் 2018): ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் இந்திய நடிகர்கள் ஸ்ரீதேவி மற்றும் சசி கபூர் ஆகியோருக்கும் மற்றும் மறைந்த ஹாலிவுட் நடிகர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

90-வது ஆஸ்கார் விருதுகள் இன்று வழங்கப்பட்டன. விருதுகள் விவரம் வருமாறு:-

சிறந்த நடிகை - பிரான்சிஸ் மெக்டார்மண்ட் (படம்- த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிசோரி)

சிறந்த நடிகர் - கேரி ஓல்டு மேன் ( படம் டார்க்கெஸ்ட் ஹவர்)

சிறந்த ஒரிஜினல் திரைக்கதை: கெட் அவுட்

கோகோவுக்கு மேலும் ஒரு ஆஸ்கர் - சிறந்த பாடலுக்கான விருதினை வென்றது

சிறந்த ஒரிஜினல் ஸ்கோர்: அலெக்ஸாண்டர் டெஸ்ப்லெட் (தி ஷேப் ஆப் வாட்டர்)

சிறந்த தழுவல் திரைக்கதை: கால் மீ பை யுவர் நேம் (Call Me by Your Name)

சிறந்த ஒலி கலவை - கிரெக் லேண்டகர், கேரி ஏ ரிஸ்ஸோ, மார்க் வெயின்கார்டன்(டன்கிர்க்)

சிறந்த ஒலி தொகுப்பு - ரிச்சர்ட் கிங், அலெக்ஸ் கிப்சன்(டன்கிர்க்)

சிறந்த படத்தொகுப்பு- லீ ஸ்மித்(டன்கிர்க்)

சிறந்த வெளிநாட்டு படம்- தி ஃபென்டாஸ்டிக் உமன் (சிலி)

சிறந்த அனிமேஷன் திரைப்படம்- கோகோ

சிறந்த ஒளிப்பதிவு- ரோஜர் ஏ. டீகின்ஸ்( பிளேட் ரன்னர்)

சிறந்த துணை நடிகை- ஆலிசன் ஜானி (ஐ, டோன்யா)

சிறந்த துணை நடிகர்- சாம் ராக்வெல் ( த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிச்சோரி)

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!