பல இளைஞர்களை ஆசை காட்டி ஏமாற்றிய நடிகை கைது!

மார்ச் 05, 2018 1135

கோவை (05 மார்ச் 2018): பல இளைஞர்களை ஆசை காட்டி பல லட்சம் மோசடி செய்த நடிகை ஸ்ருதி, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆடி போனால் ஆவணி என்ற படத்தில் நடித்தவ மைதிலி என்கிற ஸ்ருதி. கோவை பாப்பநாயக்கன்பாளையம் தனலட்சுமி நகரைச் சேர்ந்த இவர், ஃபேஸ்புக்கில் தனது படத்தை பதிவேற்றி பலபேரை நண்பர்களாக்கியுள்ளார். குறிப்பாக வெளிநாட்டில் உள்ளவர்களை அவர் குறிவைத்துள்ளார்.

இந்நிலையில் ஜெர்மனி நாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வரும் பாலமுருகன் என்பவரின் பார்வையில் ஸ்ருதியின் புகைப்படம் பட்டது. ஸ்ருதியின் அழகில் மயங்கிய அவர், ஸ்ருதியின் குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டார். ஸ்ருதியும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இருவரும் சகஜமாக பழகவே இதை பயன்படுத்தி பாலமுருகனிடம் ரூ.41 லட்சம் வாங்கி மோசடி செய்துவிட்டார்.

இதுகுறித்து ஸ்ருதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாலமுருகன் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து கடந்த ஜனவரி மாதம், கோவை குற்றப்பிரிவு ஆய்வாளராக இருந்த கலையரசி என்பவர் தலைமையிலான விசாரணை நடத்த சென்றபோது, காவல்துறையினரைத் தாக்கிவிட்டு தப்ப முயன்றதாக ஸ்ருதி குடும்பத்தினர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அதில் திருமண மோசடி வழக்கில் தொடர்புடையதாக ஸ்ருதி, தாய் சித்ரா, பிரசன்ன வெங்கடேஷ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போதே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரூ.43.5 லட்சம் பெற்றுக் கொண்டு ஸ்ருதி ஏமாற்றியதாக நாமக்கல்லைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற பொறியாளர் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தது தெரியவந்தது. அந்த வழக்கின் அடிப்படையில் ஜாமினில் வந்திருந்த ஸ்ருதி, சித்ரா, பிரசன்ன வெங்கடேஷ் ஆகிய 3 பேரும் மீண்டும் கைது செய்யப்பட்டு, காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர்.

இதனிடையே தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், இதுபோல பலரிடம் ஸ்ருதி குடும்பத்தினர் மோசடி செய்து, போலி வங்கிக் கணக்கு மூலம் பண பரிவர்த்தனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் ஸ்ருதி குடும்பத்தினர் திருமண ஆசை காட்டி 12 பேரிடம் ரூ. 3 கோடி வரை மோசடி செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அடுத்தடுத்து வழக்குகள் பாயவே ஸ்ருதி குடும்பத்தினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...