நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் மர்மமா? - வெளியுறவுத்துறை பதில்!

மார்ச் 10, 2018 979

புதுடெல்லி (10 மார்ச் 2018): நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம் உள்ளதா? என்பது குறித்த கேள்விக்கு வெளியுறவுத் துறை பதில் அளித்துள்ளது.

பிரபல நடிகை ஸ்ரீதேவி, கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றிருந்தபோது,  திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம், திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மரணத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்பதால், அதில் மர்மம் இருப்பதாகப் பரபரப்பாக பேசப்பட்டது. அதனால், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

ஸ்ரீதேவியின் உடல், துபாய் நகரில் உள்ள மருத்துவக் குழுவினரால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவின்படி அதிகப்படியான மது அருந்தியதன் காரணமாக, அவர் தங்கியிருந்த ஹோட்டலின் குளியலறையில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்ததாக துபாய் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன் பிறகு, அவரது உடல், இந்தியாவுக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி தனி விமானம் மூலம் வரப்பட்டது. ஸ்ரீதேவியின் உடல் மும்பையில் உள்ள அவரது வீட்டிலும், பின்னர் வீட்டுக்கு அருகில் உள்ள மைதானத்திலும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த நிலையில், ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக, வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், “ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஐக்கிய அரபு அமீரகம் எங்களிடம் கொடுத்து விட்டது. அந்த ஆவணங்களின் அடிப்படையில், அவரது உடல் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படியேதும் இருந்திருந்தால், இப்போது வெளியே அம்பலமாகியிருக்கும்” என்றார்.

இதற்கிடையே ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்ட பொதுநல மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது குறிப்பிடத் தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...