நடிகை சிந்து மேனன் செய்த காரியத்தை பாருங்கள்!

மார்ச் 11, 2018 1455

திருவனந்தபுரம் (11 மார்ச் 2018): வங்கி மோசடி ஒன்றில் வெளிநாட்டில் உள்ள நடிகை சிந்து மேனன் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

'ஈரம்', சமுத்திரம், கடல்பூக்கள் போன்ற தமிழ் படங்களில் நடித்த நடிகை சிந்துமேனன், பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் தனது சகோதரர் வாங்கிய ரூ.36 லட்சம் கடனுக்கு தன்னுடைய சொத்துக்களின் ஆவணங்களை கொடுத்திருந்தாராம். ஆனால் அந்த ஆவணங்கள் போலியானவை என்று தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் நடிகை சிந்துமேனனின் சகோதரைக் கைது செய்து விசாரணை நடத்திவரும் போலிசார், லண்டனை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து அங்கேயே செட்டிலாகிவிட்ட சிந்துமேனனையும் இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் மல்லையா, நீரவ் மோடியை தொடர்ந்து பலரும் வங்கி மோசடியில் ஈடுபட்டது வெளி வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், நடிகைகளும் வங்கிகளில் மோசடிகளுக்காக சிக்க ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...