சத்யராஜுக்கு லண்டனில் சிலை!

மார்ச் 12, 2018 999

லண்டன் (12 மார்ச் 2018): நடிகர் சத்யராஜுக்கு லண்டன் அருங்காட்சியகத்தில் சிலை வைக்கப் பட்டவுள்ளது.

நடிகர் சத்யராஜ் கட்டப்பா கேரக்டரில் நடித்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படம் பாகுபலி. இது இரு பாகங்களாக வெளியானது. இந்தப் படத்தைக் கண்டு மிரளாதவர்களே கிடையாது என்னும் அளவுக்கு இந்தப் படத்தின் திரைக்கதையும் கதாபாத்திரங்களும் அமைந்திருக்கும். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் மற்றும் திருப்புனையை ஏற்படுத்துவதுமாக இருப்பது கட்டப்பா கதாபாத்திரம்தான். இதை, சத்யராஜ் ஏற்று நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் நடிப்பைக் கண்டு இவருக்கு இந்திய அளவில் மிகப் பெரிய பெயர் கிடைத்தது.

இந்தப் பெருமை தற்போது உலகளவில் இடம்பெற உள்ளது. சத்யராஜின் கட்டப்பா கதாபாத்திரம், லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளது. இந்த அருங்காட்சிகத்துக்குச் செல்லும் முதல் தமிழரின் சிலை சத்யராஜின் சிலை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...