அதிகமான மேக்கப் காரணமாக அமித்தாப் பச்சன் திடிரென மயங்கி விழுந்தார்!

மார்ச் 13, 2018

மும்பை (13 மார்ச் 2018): நடிகர் அமித்தாப் பச்சன் படப் பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்தார்.

நடிகர் அமிதாப் பச்சன், ஆமிர் கான், கத்ரினா கைஃப் உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ என்ற படம் உருவாகி வருகிறது. ‘கன்ஃபெசன்ஸ் ஆஃப் எ தக்’ என்ற நாவலைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ஆதித்யா சோப்ரா இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்.

ஜோத்பூரில் நடைபெற்று வந்த இந்த படப் பிடிப்பில் அமித்தாப் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதிகமான மேக்கப் காரணமாக வலி ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஒரு நாள் ஓய்வு எடுக்குமாரு வலியுறுத்தி உள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!