நடிகை ஷ்ரேயா ரஷ்ய காதலனை மணந்தார்!

மார்ச் 17, 2018 608

மும்பை (17 மார்ச் 2018): நடிகை ஷ்ரேயா சரன் அவரது ரஷ்ய காதலனை மணந்தார்.

கடந்த மார்ச் 12 ஆம் தேதி மும்பையில் ஷ்ரேயா சரன் திருமணம் நடந்துள்ளது. அவரது ரஷ்ய காதலன் அந்த்ரேய் கொஷீவ் என்பவரை மணந்துள்ளார். ஒரு சிலர் மட்டுமே அவரது திருமணத்தில் கலந்து கொண்டாதாக் கூறப் படுகிறது.

கடந்த 2001 ஆம் ஆண்டு இஸ்டம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான ஷ்ரேயா இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் புகழ் பெற்றவர். தமிழில் ரஜினியின் சிவாஜி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...