தனது வருங்கால கணவர் யார்? நடிகை நயன் தாரா பகிரங்க அறிவிப்பு!

மார்ச் 24, 2018 1073

சென்னை (24 மார்ச் 2018): நடிகை நயன் தாரா அவரது வருங்கால கணவர் குறித்து பொது மேடையில் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் நயன் தாராவுக்கு மின்னும் நட்சத்திரம் விருது வழங்கப் பட்டது. அப்போது விருது குறித்து பேசிய நயன்தாரா தன் பெற்றோருக்கு நன்றி கூறினார். திடீரென, "எனது வருங்கால கணவருக்கு நன்றி" என்றும் தெரிவித்தார். இதன் மூலம் அவர் விக்னேஷ் சிவனை வருங்கால கணவர் என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவனை நயன் தாரா காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும் என்றாலும் பொதுவில் அவர் இதுகுறித்து எதுவும் வாய் திறக்கவில்லை. இந்நிலையில் அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளதால் விரைவில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடக்கக் கூடும் என எதிர் பார்க்கப் படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...