தனுஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் - இப்ப இவங்கதான் ஹாட் டாப்பிக்!

ஏப்ரல் 01, 2018 750

சென்னை (01 ஏப் 2018): தனுஷுடன் இணைந்து நடித்ததை பெருமையாக கூறுகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழில் காக்கா முட்டை படத்தில் இரு மகன்களிற்கு தாயாக நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். பின்பு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பெயர் பெற்றார். இப்போது விக்ரமுடன் துருவநட்சத்திரம், மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் மற்றும் ஏ.எல்.விஜய் இயக்கி வரும் கரு ஆகிய படங்களிலும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்.

இந்த நிலையில் தனுஷுடன் நடிப்பது பல நாள் கனவு என்றும் அது வட சென்னை படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் வட சென்னை படத்தின் வாய்ப்பு சமந்தா, அமலா பால் என பெரிய நடிகைகளை தாண்டி எனக்கு கிடைத்தது. என்று பெருமையாக கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...