நான் விரைவில் இறந்து போவேன் - பிக்பாஸ் நடிகர் பரபரப்பு தகவல்!

ஏப்ரல் 05, 2018 907

மும்பை (05 ஏப் 2018): புற்று நோய் பாதிக்கப் பட்டுள்ள நடிகர் கேஆர்கே என்கிற கமால் ஆர் கான் விரைவில் இறந்து போவேன் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற இவர் பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு வயிற்றில் புற்று நோய் இருப்பதாகவும் அது மூன்றாவது ஸ்டேஜில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்னும் 1 அல்லது 2 வருடங்களில் இறந்து போவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மீதமுள்ள காலங்களை குடும்பத்துடன் செலவிட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் என்னை வெறுப்பவர்களுக்கும், என்னை விரும்புபவர்களுக்கும் நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் என் இரண்டு ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமே என்ற கவலை தான் எனக்கு. ஏ கிரேட் படத்தை தயாரிக்க வேண்டும், அமிதாப் பச்சன்ஜியுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் இல்லை அவரை வைத்து தயாரிக்க வேண்டும்.

இந்த இரண்டு ஆசைகளும் என்னுடன் இறந்து போகும் என்று வருத்தப்பட்டுள்ளார் கேஆர்கே.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...