தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலு. இவர் தமிழில் நயன்தாரா நடித்த ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரிலும், தெலுங்கில் அனாமிகா பெயரிலும் வெளியான படத்தை டைரக்டு செய்தவர். “கொம்முலு வச்சின சேகருடு பட இயக்குனர் பெண்கள் தன்னுடன் படுக்கைக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். நடிகைகளிடம் வாக்குறுதி அளித்து ஏமாற்றுகிறார்” என்று சேகர் கம்முலுவை பற்றி ஸ்ரீரெட்டி குறிப்பிட்டு இருந்தார். இதற்கு சேகர் கம்முலு மறுப்பு தெரிவித்ததுடன் ஸ்ரீரெட்டி மீது வழக்கு தொடரப்போவதாக எச்சரித்தார்.
இந்த நிலையில் புதிதாக பிரபல தெலுங்கு நடிகர் குறித்து ஸ்ரீரெட்டி பரபரப்பு ட்விட் செய்தார். அதில் “அந்த நடிகர் சினிமாவிலும், நிஜ வாழ்க்கையிலும் இயல்பாக நடிக்க தெரிந்தவர். யாரையும் உணர்வுப்பூர்வமாக அணுகி சிக்க வைப்பார். மக்கள் முன் நாடகமாட தெரிந்தவர். மற்ற கதாநாயகர்கள் மகேஷ்பாபு, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆரிடம் இருந்து நீங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். தவறான நடத்தைகள் உள்ளவர். பல பெண்களை படுக்கையில் பயன்படுத்தி உள்ளார். ஒரு நாள் நிச்சயம் கடவுள் அவரை தண்டிப்பார்.” என்று ஸ்ரீரெட்டி கூறினார்.
இதற்கிடையே நேற்று பிற்பகல் ஐதராபாத்தில் உள்ள மூவி ஆர்டிஸ்ட் அசோசியேசன் அலுவலகத்திற்கு வந்த ஸ்ரீ ரெட்டி தனது மேலாடையைக் கழற்றி சாலையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்த தகவலின் கிடைத்ததும், அங்கு விரைந்து வந்த ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் ஸ்ரீ ரெட்டியைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.