காவிரிக்கான திரையுலகினர் போராட்டத்தில் முக்கிய பிரபலங்கள் மிஸ்ஸிங்!

ஏப்ரல் 08, 2018 564

சென்னை (08 ஏப் 2018): தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் இன்று அமைதி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் ரஜினி, கமல், ஷங்கர், இளையராஜா ஆகிய முன்னணி திரையுலகினர் இதில் கலந்து கொண்டனர். ஆனால் மோகன், டி ராஜேந்தர், பாக்யராஜ், கார்த்திக், அர்ஜுன், பிரபு ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

மேலும் மேலும் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு இடம்மாறி பெரிய ஆட்களாக வளர்ந்து நிற்கும் பிரகாஷ்ராஜ், பிரபுதேவா, லாரன்ஸ் போன்ற நபர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மேலும் சாய் தன்ஷிகா, வரலட்சுமி சரத்குமார் போன்ற சில நடிகைகள் மட்டும் இந்த போரட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் ராதா, அம்பிகா, ராதிகா, குஷ்பு, ரேவதி, ராமயா கிருஷ்ணன் ஆகியோரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதே சமயத்தில் சமகால நடிகைகளும் இதில் கலந்து கொள்ளவில்லை.

முக்கிய நடிகர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்காதது தமிழ் திரையுலகினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...