நடிகர்கள் நடத்தியது போராட்டமா? அல்லது வேறு ஏதாவது?

ஏப்ரல் 08, 2018 670

சென்னை (08 ஏப் 2018): காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தும் திரையுலகினர் இன்று மவுன போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் நடிகர்கள் மவுன போராட்டம் என்ற பெயரில் கலகலப்பாக பேசி சிரித்துக் கொண்டு இருந்தனர் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுக்க தொடங்கியுள்ளனர்.

போராட்டம் என்றால் ஒன்று உண்ணா விரதம் இருக்க வேண்டும் அல்லது அமைதி வழியில் பேரணியாவது செல்ல வேண்டும் இது இரண்டும் இல்லாமல் அவர்களுக்கு தோதாக ஒரு இடத்தில் சங்கமித்து மவுன போராட்டம் என்று பெயர் அறிவித்து அதுவும் காலை உணவை சாபிட்டு விட்டு மதிய உணவுக்கு வீட்டுக்கு செல்வதெல்லாம் ஒரு போராட்டமா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கிடையே தனது பெரியம்மா மரணம் நிகழ்ந்து விட்டதால் நடிகர் சூரி போராட்டத்தில் கலந்து கொள்ள இயலாமைக்கு வருத்தம் தெரிவித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நான் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் இன்று விவசாயிகளுக்காக உண்ணா விரதம் இருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார். சூரியின் ட்விட்டர் பதிவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ள தோடு, போராட்டம் என்ற பெயரில் சிரித்துப் பேசி கொண்டாடிவிட்டு சென்றுள்ள நடிகர்களுக்கு மத்தியில் உண்ணா விரதம் இருக்கும் சூரியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...