நடிகைகளின் அந்தரங்கங்களை போட்டுடைத்த பிரபல நடிகை!

ஏப்ரல் 10, 2018 1520

ஐதராபாத் (10 ஏப் 2018) : வடநாட்டு நடிகைகள் படுக்கையை பகிர்வதால்தான் தென்னகத்தில் ஜொலிக்கிறார்கள் என்று நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகையான ஸ்ரீரெட்டி சமீபத்தில் தெலுங்கு பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். மேலும் திரைப்பட வர்த்தக சபை முன்பு அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் அரை நிர்வாண போராட்டம் நடத்திய அவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதற்கிடையே நடிகை ஸ்ரீரெட்டி மீண்டும் ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை கூறி உள்ளார். பிரபல தயரிப்பாளரின் மகன் அடிக்கடி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அரசுக்கு சொந்தமான ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று என்னை வற்புறுத்தி உல்லாசமாக இருப்பார். ஸ்டூடியோவுக்குள் யாரும் வரமாட்டார்கள் என்பதால் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஸ்டூடியோவை சிவப்பு விளக்கு பகுதியாகவே மாற்றிவிட்டனர்.

எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர் மகன் தொடர்பான புகைப்படங்களை விரைவில் வெளியிடுவேன். வட இந்தியாவில் இருந்து வரும் நடிகைகள் படுக்கைக்கு உடனே செல்ல ஒப்புக் கொள்வதால்தான் தென் இந்திய சினிமாவில் வட இந்திய நடிகைகள் அதிகமாக உள்ளனர். என்ன காரணத்திற்காக எனக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. எனக்கு தடை விதிக்க அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. ஒரு பெண்ணாக எனது கருத்தை சுதந்திரமாக கூற உரிமை இருக்கிறது. தெலுங்கு பட உலகில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லைக்கு எதிரான எனது போராட்டம் தொடரும். என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...