ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய விருது!

ஏப்ரல் 13, 2018 578

புதுடெல்லி (13 ஏப் 2018): இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

65-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இயக்குநர் பிரியதர்ஷன் தலைமையிலான குழு விருதுகளை அறிவித்தது. இதில் சிறந்த தமிழ் படமாக டூலெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. செழியன் இயக்கியிருக்கும் இந்த படம் சென்னையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரகுமான் (காற்று வெளியிடை, மாம்(பின்னணி இசை))

சிறந்த மலையாள படம் - தொண்டிமுத்தலும் த்ரிக்சக்‌சியும்

சிறந்த கன்னட படம் - ஹெப்பட் ரமாகா

சிறந்த இந்தி படம் - நியூடன்

சிறந்த நடிகை (சிறப்பு பிரிவு) - பார்வதி மேனன்

ஸ்பெஷல் எபெக்ட்ஸ் - பாகுபலி-2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...