ஆசிஃபாவுக்காக தேசிய விருதை உதாசீனப் படுத்திய நடிகை!

ஏப்ரல் 14, 2018 1411

திருவனந்தபுரம் (14 ஏப் 2018): ஆசிஃபா வன்புணர்வு கொடூரத்தில் தேசிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சி இல்லை என்று நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்.

நேற்று வெளியான தேசிய விருது பட்டியலில் மலையாளத்தில் டேக் ஆப் என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை பார்வதிக்கு சிறப்பு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடிகை பார்வதி இதற்காக மகிழ்ச்சி அடையாமல் இதற்கு நேர்மாறாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறிய கருத்து பலரையும் அதிர்ர்சி அடைய வைத்துள்ளது. அதில், தேசிய விருது கிடைத்ததற்காக நடுவர்களுக்கு நன்றி சொல்ல விரும்பவில்லை நான் இந்தியன், நான் வெட்கப்படுகிறேன், காஷ்மீரில் கோவிலுக்குள் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையுண்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் உண்ணா பாலியல் பலாத்கார சம்பவமும் அவமானமாக இருக்கிறது என்று எழுதப்பட்டிருந்தது.

நடிகை பார்வதியைப் போல டென்னிஸ் வீராங்கனை சானியாமிர்சா, பாலிவுட் நடிகர்கள் அக்‌ஷய் குமார், பர்கான் அக்தர், அபிஷேக்பச்சன் ஆகியோரும் சமூக ஊடகங்கள் வழியாக இச்சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...