அட ஜோதிகாவின் கணவராக இவரா?

ஏப்ரல் 15, 2018 810

சென்னை (15 ஏப் 2018): நடிகை ஜோதிகா தமிழில் புதிதாக நடிக்கும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் விதார்த் நடிக்கிறார்.

வித்யா பாலன் நடிப்பில் வெளியாகி ஹிட்டான இந்தி படமான தும்ஹாரி சுலு. இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் வித்யா பாலன் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார். ராதா மோகன் இயக்குகிறார். இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக விதார்த் நடிக்கிறார்.

குற்றமே தண்டனை, ஒரு கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை ஆகிய படங்களில் சிறப்பாக நடித்திருந்த விதார்த் ஜோதிகாவின் படத்திலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜோதிகாவை மொழி படத்தில் ராதா மோகன் நன்கு பயன்படுத்தி இருந்தார். எனவே இதிலும் ஜோதிகாவின் நடிப்புக்கு நல்ல தீனி உண்டு என எதிர் பார்க்கலாம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...