ஆர்யா தேர்ந்தெடுக்கும் மனைவி இவரா?

ஏப்ரல் 17, 2018 984

சென்னை (17 ஏப் 2018): எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா தேர்ந்தெடுக்கும் பெண் யார்? என்பது இன்று தெரிந்துவிடும்.

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, எங்க வீட்டு மாப்பிள்ளை. இதில் 16 பெண்களில் ஒருவரை ஆர்யா திருமணம் செய்வார் என்று கூறப் பட்டது. தற்போது இறுதிப் சூசனா, அகாதா, சீதாலட்சுமி என மூவர் உள்ளனர். இவர்களில் ஒருவரை ஆர்யா இன்று தேர்ந்தெடுத்து திருமணம் செய்வார் என எதிர் பர்க்கப் படுகிறது.

ஆனால் இது ஒரு ரியாலிட்டி ஷோ என்பதால் ஒருவேளை இவை பொய்யாக இருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை ஆர்யா தேர்ந்தெடுக்கும் பெண் நினைத்தால் ஆர்யாவை நிராகரிக்கலாம் என்ற விதிமுறையும் இந்நிகழ்ச்சியில் உள்ளதால் இன்று முழு விவரம் தெரிந்துவிடும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...