அடப்பாவி இப்படி செய்துட்டாரே ஆர்யா!

ஏப்ரல் 18, 2018 1007

சென்னை (17 ஏப் 2018): எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ஒரு கேடுகெட்ட நிகழ்ச்சியில் ஆர்யா யாரையும் மனைவியாக தேர்தெடுக்காமல் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, எங்க வீட்டு மாப்பிள்ளை. இதில் 16 பெண்களில் ஒருவரை ஆர்யா திருமணம் செய்வார் என்று கூறப் பட்டது. தற்போது இறுதிப் சூசனா, அகாதா, சீதாலட்சுமி என மூவர் உள்ளனர். இவர்களில் ஒருவரை ஆர்யா இன்று தேர்ந்தெடுத்து திருமணம் செய்வார் என எதிர் பர்க்கப் பட்டது.

ஆனால் இறுதிப் போட்டியில் ஆர்யா யார் மனதையும் புண்படுத்த நினைக்கவில்லை என்றும் எனவே இன்னும் எனக்கு கொஞ்சம் நாட்கள் வேண்டும் என்றும் முடிவை அறிவிகாமலேயே மேலும் யாரையும் தேர்ந்தெடுக்காமலேயே நிகழ்ச்சியை முடித்தார்.

ஆர்யாவின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பும் அதேவேளை ஆதரவும் அளித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...