திரையுலகில் செக்ஸ் டார்ச்சர் குறித்து நடிகை ரம்யா நம்பீசன் விளக்கம்!

ஏப்ரல் 19, 2018 3025

சென்னை (19 ஏப் 2018): திரையுலகில் செக்ஸ் டார்ச்சர் உள்ளது என்று நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.

நடிகைகளுக்கு செக்ஸ் டார்ச்சர் இருப்பது பல காலமாக இருந்தாலும் அதனை எந்த நடிகையும் முன் வந்து தெரிவித்தது கிடையாது. எனினும் சமீப காலமாக இதனை பல நடிகைகள் வெளிப்படையாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக நடிகை வரலட்சுமி, நடிகை ஸ்ரீரெட்டி உள்ளிடவர்கள் வெளிப்படையாக தெரிவித்தனர். மேலும் மலையாள நடிகை பாவனாவுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லையும் அதில் தொடர்புடைய புகழ் பெற்ற நடிகர் திலீப் சிக்கினார்.

இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகை ரம்யா நம்பீசன் “திரையுலகில் நடக்கும் மோசமான சம்பவங்கள் பற்றி என் சக நடிகைகள் கூறுவதை நான் மறுக்கவில்லை. அது உண்மைதான். ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த தொல்லைக்கு நான் ஆளாகவில்லை. ஆனால், என் தோழிகள் இதை சந்தித்துள்ளனர் என்பது வெட்கமாக இருக்கிறது. இதுபற்றி நடிகைகள் தைரியமாக பேச வேண்டும்” என அவர் கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...