எனக்கு 26 உனக்கு 52!

ஏப்ரல் 23, 2018 746

மும்பை (23 ஏப் 2018): 52 வயது இந்தி நடிகர் சோமன் 26 வயது விமான பணிப் பெண்ணை மணந்துள்ளார்.

பிரபல இந்தி நடிகர் மிலிந்த் சோமன். இதுவரை சுமார் 50 படங்கள் வரை நடித்துள்ள சோமன், தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், பையா, அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே, மிலன் என்ற பிரெஞ்ச் நடிகையைத் திருமணம் செய்திருந்த நிலையில், 2009-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

இந்நிலையில், நேற்று தனது காதலி அங்கீதா கன்வாரை கரம்பிடித்துள்ளார் சோமன். மும்பை அலியாபக் என்ற இடத்தில் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடந்தது. அங்கீதா அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அசாம் மக்கள் மரபுப்படி திருமணம் நடந்தது. அங்கீதாவுக்கு 26 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...