பிரபல டிவி சீரியல் நடிகை மர்ம மரணம்!

April 24, 2018

மலப்புரம் (24 ஏப் 2018): பிரபல சீரியல் நடிகை கவிதா (35) எரிந்த நிலையில அவரது விட்டில் பிணமாக கிடந்தார்.

கவிதா மலையாள டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். திருமணமான அவருக்கு 4 வயதில் மகள் உள்ளார். கணவர் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நீலாம்பூரில் அவர் வசித்து வந்தார்.

இந்நிலையில் கவிதா தனது மகள் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில் கவிதா தனது வீட்டில் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உள்புறமாக பூட்டியிருந்த வீட்டில் கவிதா பிணமாக கிடந்துள்ளார். மேலும் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கவிதாவின் கையில் மின்சார வயர் இருந்துள்ளது. மேலும் அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டதற்கான தடயங்களும் இருந்தது. இது தற்கொலையா இல்லை கொலையா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!