தமிழ் நாட்டு நிலமை தெரிந்துமா இப்படி? - நடிகையை விளாசிய நெட்டிசன்கள்!

ஏப்ரல் 25, 2018 975

சென்னை (25 ஏப் 2018): முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் நடிகை மகா லட்சுமியை நெட்டிசன்கள் வறுத்தெடுக்க தொடங்கி விட்டனர்.

திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் விளம்பரம் ஒன்றில் நடிகை மகா லட்சுமி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்காக அர்ச்சனை செய்வார். மேலும் அவரை வாழ்த்தி அந்த விளம்பரம் வரும்.

இதனால் பலர் ஆவேசப் பட்டதோடு, அதில் நடித்த நடிகையை வறுத்தெடுத்து விட்டனர். அதிலும், தமிழ் நாட்டு நிலமை தெரிந்துமா? நீங்கள் இப்படி நடித்தீர்கள்? என்றும் அவரிடம் கேட்க தொடங்கி விட்டனர்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், " என்ன செய்வது விளம்பரம் இப்படி இருக்கும் என்று தெரியாது எனினும் ஒப்புக் கொண்டதால் நடித்து கொடுத்தேன்" என்று சமாளித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...