ரஜினியுடன் இணைந்து நடிக்கும் விஜய் சேதுபதி!

ஏப்ரல் 26, 2018 727

சென்னை (26 ஏப் 2018): நடிகர் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கிறார்.

ரஜினிகாந்த், '2.ஓ', 'காலா' ஆகிய படங்களை அடுத்து இளம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தமானார். இந்தப் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் விவரம் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.
தற்போது, ரஜினியுடன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...