வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட ரஜினி - நீதிமன்றம் உத்தரவு!

ஏப்ரல் 28, 2018 1413

சென்னை (28 ஏப் 2018): அவதூறு வழக்கு ஒன்றில் நடிகர் ரஜினி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா மீது சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா, செக் மோசடி வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் இதில் தலையிட்ட நடிகர் ரஜினிகாந்த், போத்ரா தன்னிடம் இருந்து பணம் பறிப்பதற்காக போத்ரா இதுபோன்ற வழக்கை தொடர்ந்துள்ளதாக, கூறியிருந்தார். இதையடுத்து, தன்னைபற்றி அவதூறாக பேசிய நடிகர் ரஜினி மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணைக்கு போத்ரா ஆஜராகாததால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து போத்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டது. மேலும், விசாரணைக்கு தேவைப்படும் போது ரஜினி ஆஜராகவேண்டும் எனஅறிவுறுத்தியது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி போத்ராவின் வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி பஷீர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் ஜூன் 6ம் தேதி ரஜினிகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...