தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை திரைப்பட கலைஞர்கள் புறக்கணிப்பு!

மே 03, 2018 794

புதுடெல்லி (03 மே 2018): தேசிய திரைப்பட வழங்கும் விழாவை சுமார் 60க்கும் மேற்பட்ட திரைப்பட கலைஞர்கள் புறக்கணித்துள்ளனர்.

65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இதில் 11 பேருக்கு மட்டுமே குடியரசுத் தலைவர் தேசிய விருதுகளை வழங்குவார் என அறிவிக்கப்பட்டது.

எஞ்சிய திரைக்கலைஞர்களுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தேசிய விருதுகளை வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 60 க்கும் மேற்பட்ட திரைக் கலைஞர்கள் டெல்லி அசோகா ஹோட்டலில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்காததால் அவர்களின் இருக்கைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்கவில்லை.

இதற்கிடையே ஒருவருக்கு கூட குடியரசுத் தலைவர் விருது வழங்காததால் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியே தேசிய விருதுகளை வழங்கி வருகிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...