நிர்வாணமாக நடித்ததில் என்ன தவறு? - பிரபல தமிழ் நடிகை பரபரப்பு புகார்!

மே 18, 2018 5375

சென்னை (18 மே 2018): கதைக்கு அவசியம் என்பதால் நிர்வாணமாக நடித்ததில் தவறு என்ன உள்ளது? என்று நடிகை தன்யா தெரிவித்துள்ளார்.

போர்க்களத்தில் ஒரு பூ, 18.5.2009 ஆகிய படங்களில் நடித்துள்ளவர் தன்யா. போர்க்களத்தில் ஒரு பூ படத்தில் இலங்கையில் நடந்த போரில் உடல் சிதைத்து கொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவாக நடித்திருந்தார். தற்போது வெளியாகியுள்ள 18.5.2009 படத்தில் விடுதலை சிறுத்தைகள் இயக்க போராளியாக தமிழ் செல்வி என்ற கதாபாத்திரத்தில் தன்யா நடித்துள்ளார்.

படத்தில் தமிழ்ச்செல்வி இலங்கை ராணுவத்தால் நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்படுகிறார். அவரது கணவர் தற்கொலைப்படை தாக்குதலில் இறக்க, குழந்தை பசியால் இறக்கிறது.

இந்நிலையில் தன்யாவுக்கு கடந்த 14ம் தேதி இரவு 1.15 மணிக்கு யாரோ போன் செய்து அவரை அசிங்கமாக திட்டியுள்ளனர். அது எப்படி நீ நிர்வாணமாக நடிக்கலாம் என்று கேட்டு திட்டியுள்ளனர். தொடர்ந்து அவருக்கு மிரட்டல் வந்ததை அடுத்து தன்யா இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...