இரும்புத்திரை - டிஜிட்டல் இந்தியாவின் மிரட்டல்!

May 25, 2018

டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் தற்போது நிகழும் பிரச்சனைகளை தைரியமாக சொல்லும் படம் இரும்புத்திரை.

விஷால் ஆர்மி ட்ரெயினிங் ஆபிசர், எதற்கெடுத்தாலும் கோபம், கடன் கொடுப்பவர்களை கண்டால் கடுங்கோபம் என இருப்பவர் விஷால்.(அதற்கான காரணமும் படத்தில் உள்ளது).

ஒரு கட்டத்தில் தன் தங்கையின் திருமணத்திற்காக விஷாலே லோன் வாங்கும் நிலைமை வந்துவிட்டது. எங்கு தேடியும் லோன் கிடைக்காததால், ஒரு ப்ரோக்கர் கொடுக்கும் ஐடியாவை வைத்து போலி ஆவணங்கள் தயார் செய்து லோன் பெறுகிறார் விஷால்.

ஆனால், அவர் லோன் வாங்கிய அடுத்த சில நாட்களில் விஷால் கணக்கில் இருக்கும் அனைத்து பணமும் வேறு ஒரு வங்கி கணக்கிற்கு சென்றுவிடுகின்றது. அதை தொடர்ந்து விஷால் யார் என்று தேட, மிகப்பெரும் நெட்வொர்க் வைத்து இதை செய்வது அர்ஜுன் என தெரிகின்றது. பிறகு அர்ஜுனை விஷால் பிடித்தாரா, பணத்தை மீட்டாரா? என்பதை மிகவும் விறுவிறுப்பாக எடுத்திருக்கின்றார் மித்ரன்.

விஷால் பல தோல்விப் படங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு தரமான படத்தில் நடித்துள்ளார் என்றே சொல்லலாம். கடுங்கோபமான இளைஞன், தவறை தட்டிக்கேட்கும் ஆள் என கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்தி போகின்றார். சமந்தா விஷாலுக்கு கவுன்ஸிலிங் கொடுக்கும் சைக்கார்டிஸ்ட்.

ஹீரோயின் என்றாலே லூசு போல் காட்டும் தமிழ் சினிமாவில் அவருக்கு என்று மிகவும் நல்ல கதாபாத்திரம் கொடுத்த மித்ரனுக்கு வாழ்த்துக்கள். ரோபோ ஷங்கர் விஷாலின் மாமாவாக தன் டைமிங் கவுண்டர் வசனத்தால் கலக்கியுள்ளார். அப்பாவாக வரும் டெல்லி கணேஷும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு எமோஷ்னல், காமெடி நிறைந்த கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார். இதையெல்லாம் விட நம்ம ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், இது தான் நம் ஏரியா என்று இறங்கி விளையாடியுள்ளார்.

இரும்புத்திரை கண்டிப்பாக இந்த ஜெனேரேஷன் ஒவ்வொருவரும் குறிப்பாக ஸ்மார்ட் போன் உலகத்தில் வாழும் எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். நம் இரு கண்கள் தான் மொபைலை பார்க்கின்றது, ஒரு கைகள் தான் டைப் செய்கின்றது என நாமே நினைத்து ஏமாந்துக்கொண்டு இருக்கின்றோ, நம்மை ஆயிரம் கண்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றது.

ஆயிரம் கைகள் ஆப்ரேட் செய்கின்றது என்பதை நமக்கே உணர்த்துகின்றது. ஒரு கட்டத்தில் இந்த ஆண்ட்ராய்ட் மொபைல் தேவை தானா என யோசிக்க வைக்கின்றது, அதை விட முதல் படத்திலேயே டிஜிட்டல் இந்தியாவின் மோசமான விளைவுகளை தைரியமாக கூறிய இயக்குனரை கைக்கொடுத்து வரவேற்கலாம்.

 

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!