சீ நீயெல்லாம் ஒரு பெண்ணா? -பிக்பாஸ் நடிகையை வறுத்தெடுத்த ரசிகர்கள்!

மே 29, 2018 873

மும்பை (29 மே 2018): புனித மாதத்தில் ஆபாச உடை அணிந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள நடிகை ஹினா கானுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிக்பாஸ் ஹிந்தி வெர்சனில் 11 வது சீசனில் இரண்டாம் இடம் பிடித்தவர் நடிகை ஹினா கான், இவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்நிலையில் இவர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஆபாசமான உடையில் நடனம் ஆடி வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள், "ஒரு முஸ்லிம் பெண்ணான நீங்கள் மற்ற நாட்களில் எப்படியோ ஆனால் புனித ரமலான் மாதத்தில் அதனை மதிக்காமல் இவ்வாறு உடை அணிந்து நடனம் ஆடியுள்ளது ஏற்புடையதல்ல. இந்த மாதத்திற்கு நீங்கள் மதிப்பளித்திருக்க வேண்டும்" என்று பதிவிட்டு கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...