காலாவுக்கு தொடரும் எதிர்ப்பு - காலாவுக்கு எதிராக வழக்கு!

ஜூன் 03, 2018 952

சென்னை (03 ஜூன் 2018): காலா திரைப்படத்திற்கு எதிராக நிஜ காலாவின் மகன் ஜவஹர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ரஜினியின் காலா திரைப்படம் வரும் 7 ஆம் தேதி வெளியாக ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகின்றன. இந்நிலையில் ரஜினியின் சமீபத்திய தமிழ் எதிர்ப்பு பேச்சுக்கள் ஒட்டுமொத்த மக்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது. இணையங்களிலும் boycottkala என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் உண்மை காலா திரவியம் நாடார் என்பவரின் மகன் ஜவஹர் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில், என் அப்பா திரவியம் நாடார்தான் காலாவாக சித்தரிக்கப் பட்டுள்ளார். அவர் நல்லவராகவே மும்பையில் இருந்தார். ஆனால் காலாவில் தவறாக சித்தரித்திருப்பதாக தெரிகிறது. எனவே நடிகர் ரஜினி, தயாரிப்பாளர் தனுஷ் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் ரூ 101 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்லது. இதனால் காலா ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...