ரஜினிக்கு மட்டும் இல்லை கமலுக்கும் அதே நிலைதான்!

June 04, 2018

பெங்களூரு (04 ஜூன் 2018): கர்நாடகாவில் ரஜினியின் காலாவை தொடர்ந்து கமலின் விஸ்வரூபம் 2 படத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த், மற்றும் கமல்ஹாசன் இருவரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும் என தமிழகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் கன்னட அமைப்புகள் இவர்களின் படங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளன.

இன்று கர்நாடக முதல்வரை சந்திக்க பெங்களூரு சென்றிருக்கும் கமல்ஹாசன் சினிமா சம்பந்தமாக எதையும் பேசப்போவதில்லை என சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சந்திப்பு முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்த குமாரசாமியும், கமலஹாசனும் காவிரி விவகாரம் குறித்து மட்டும் பேசியதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே ரஜினியின் காலா படத்தை கர்நாடகாவில் திரையிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்தால் படத்தை திரையிடப்போவதில்லை என கோல்டி ஃபிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. இதையடுத்து தற்போது கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் விஸ்வரூபம்- 2 படத்திற்கும் தடை விதிப்போம் என கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!