காலா படம் எப்படி?

ஜூன் 06, 2018 905

காலா படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் வெளிநாட்டில் படத்தை பார்த்த உமைர் சாந்து காலா படம் குறித்து தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பா. ரஞ்சித் நடிப்பில் ரஜினிகாந்த் மீண்டும் நடித்திருப்பதால் இப்படம் கூடுதல் கவனத்துடன் பார்க்கப்படுகிறது. காலா படம் பொழுதுபோக்கு, பறக்கும் வசனம் என்று ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

பா, ரஞ்சித், இன்றைய மல்டிபிளக்ஸ் தியேட்டர் ரசிகர்களுக்கு தேவையான அனைத்தையும், காலா படத்தில் வழங்கி கலக்கியுள்ளார். காலா படத்தில் ரஜினியின் திறமையை வேறுவிதமாக கையாண்டு இருக்கிறார் ரஞ்சித். இன்றைய ரசிகர்களுக்குத் தேவையானவற்றை எப்படி ரஜினியிடம் வரவழைக்க வேண்டுமோ அதை சரியாக கொண்டு வந்துள்ளார். இது அவரது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

ரஜினிகாந்தின் படத்தில் அவர் மட்டும்தான் அனைத்துமாக இருப்பார். அந்தளவிற்கு அவரது ஆளுமை படத்தில் இருக்கும். அவரது நடிப்பு

தொழில்நுட்பம் ஆகட்டும், நடனம், பாடல், குடிசைப் பகுதி செட் அமைத்து இருப்பது, ஆர்ட் என்று அனைத்தும் காலா படத்தில் பிரமாதமாக அமைத்துள்ளார் ரஞ்சித். எடிட்டிங் பேச வைக்கும், அந்தளவிற்கு துல்லியமாக எட்டி செய்யப்பட்டுள்ளது.

நானா பாடகரின் நடிப்பு அற்புதம். ஹூமா குரேசி குறிப்பிடும்படி பிரமாதமாக நடித்துள்ளார். அனைத்து துணை நடிகர்களும் தங்களது பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

ரஜினிக்கு இதுவும் ஒரு வெற்றிப் படமாக அமைய வாய்ப்புள்ளது. 

இவ்வாறு உமைர் சாந்து தெரிவித்துள்ளார். 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...