காலா திரையிடல் நிறுத்தம் - ரஜினி ரசிகர்கள் அதிருப்தி!

ஜூன் 07, 2018 902

பெங்களூரு (07 ஜூன் 2018): கர்நாடகாவில் காலா படம் திரையிடவிருந்த திரையரங்குகளில் காலா திரையிடப் படவில்லை.

காவிரி பற்றி, ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தையடுத்து அவர் நடித்து இன்று ரிலீசாகியுள்ள காலா திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கன்னட அமைப்பினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இதனையும் மீறி கர்நாடகாவில் அனைத்து திரையரங்குகளிலும் காலா திரையிடப்படும் என விநியோகஸ்தர் அறிவித்திருந்தார். இதனால் இன்று அதிகாலை நான்கு மணி முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் காத்திருந்தனர்.

இந்நிலையில் கன்னட அமைப்பினர் சிலர் பெங்களூர் மல்லேஸ்வரம், மந்திரிமாலில் உள்ள தியேட்டர் ஒன்றிற்குள் புகுந்து, அங்கிருந்த ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளனர். அதில் ஒருவர் ஹெல்மெட்டால், தியேட்டர் ஊழியர் தலைமீது ஓங்கியடித்தார். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. காயமடைந்த தியேட்டர் ஊழியர் பெயர், பிரசாத் ஷெட்டி என தெரியவந்துள்ளது. இவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இதனால் காலா திரையிடவிருந்த அனைத்து கர்நாடக திரையரங்குகளிலும்ன் காலா திரையிடல் நிறுத்தப் பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் தமிழகம் வந்து காலாவை காண முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...