விஸ்வரூபம் 2 டிரைலர் இன்று வெளியீடு!

ஜூன் 11, 2018 695

சென்னை (11 ஜூன் 2018): கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 டிரைலர் இன்று வெளியிடப் படுகிறது.

கமலின் விஸ்வரூபம் படத்தின் முதல் பாகம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. எனினும் அப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.

இந்நிலையில் விஸ்வரூபம் 2 படத்தை வரும் ஆகஸ்ட் 15 ல் வெளியிட கமல் திட்டமிட்டுள்ளார். அதன் டிரைலர் இன்று வெளியாகிறது. மூன்று மொழிகளில் வெளியிடப் படவுள்ள இப்படத்தின் டிரைலரை இந்தி நடிகர் அமீர்கான், ஜுனியர் என்.டி.ஆர், நடிகை ஸ்ருதி ஹாசன் ஆகியோர் மாலை ஐந்து மணிக்கு வெளியிடுகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...