பட வாய்ப்புக்காக நடிகைகள் செய்யும் காரியம் இதுதான் - போட்டுடைத்த பிரபல நடிகர்!

June 15, 2018

மும்பை (15 ஜூன் 2018): பட வாய்ப்புக்காக பிரபல நடிகர்களை பல நடிகைகள் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக பிரபல நடிகர் ரவிகிஷன் தெரிவித்துள்ளார்.

இந்தி மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவிகிஷன் இதுகுறித்து கூறுகையில், “பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக பலரும் பேசுகின்றனர். ஆனால் இதே காரணத்துக்காக நடிகர்களையும் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளது. புதிதாக வாய்ப்பு கேட்டு வரும் நடிகர்கள் செக்ஸ் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். இது சினிமாவில் சகஜமாக நடந்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் சில முன்னணி நடிகைகள், நடிகர்களை கொடுமைப் படுத்தும் சம்பவங்களும் நடக்கின்றன. உங்களை விற்று பெறும் வாய்ப்பினால் எதிர்காலத்தில் நிலைக்க முடியாது என்று கூறிய ரவிகிஷன் இவ்வாறு திரைத்துறைக்கு வந்து வெற்றி பெற்றவர்களுக்கு தன்னை விற்றுத்தான் இந்த நிலைமைக்கு வந்தோம் என்ற நினைப்பே கொடுமைப்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.

ரவிகிஷனுக்கு முன்னதாக இதே குற்றச்சாட்டை இந்தியில் முன்னணி நடிகராக இருக்கும் ரன்வீர்சிங் , நடிகர் ஆயுஷ்மான் குரானா ஆகியோரும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!