திரைத்துறையில் படுக்கையை பகிர்வது பற்றி நடிகை அர்த்தனா கருத்து!

ஜூன் 17, 2018 1191

சென்ன (17 ஜூன் 2018): திரைத்துறையில் ஜொலிக்க வேண்டுமென்றால் பலருடன் படுக்கையை பகிர்ந்ததால்தான் முடியும் என்ற பல நடிகைகள் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமுத்திரக்கனியின் தொண்டன் படம் மூலம் தமிழில் தங்கை கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை அர்த்தனா. அதன் தொடர்ச்சியாக வள்ளிகாந்த் இயக்கத்தில் வெளியான செம படம் மூலம் நாயகியானார். தற்போது வெண்ணிலா கபடிக் குழு -2 படத்தில் நடித்து வரும் அர்த்தனா, திரைத்துறையில் உள்ள பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாகப் பேசி பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்," எனக்கு இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டதில்லை. எனினும் அவ்வாறு வரும் சூழலில் மறுப்பு தெரிவித்துவிட்டால் பிரச்சனை சால்வ் ஆகிவிடும். எதற்கும் நாம் துணிந்து செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஜிவியின் செம படத்தில் நடித்த அர்த்தனா கார்த்தியின் கடை குட்டி சிங்கம் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...