பிரபல டி.வி. தொகுப்பாளினி தற்கொலை!

ஜூன் 19, 2018 754

ஐதராபாத் (19 ஜூன் 2018): பிரபல டி.வி தொகுப்பாளினி தேஜஸ்வினி(25). தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தனியார் தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய தேஜஸ்வினி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பவன் குமார் என்பவரை காதலித்து பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்து கொண்டார். இருவீட்டாரும் தங்களின் திருமணத்தை ஏற்காததை அடுத்து அவர்கள் துபாய்க்கு சென்றுவிட்டனர். இருவரும் வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள்.

பின்பு பவன் குடும்பத்தினர் இவர்கள் திருமணத்தை ஏற்றுக் கொண்டதை அடுத்து பவன் வீட்டில் இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் தேஜஸ்வினி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கு முன்பு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தனது கணவர் பவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதனால் மன உளைச்சளுக்கு ஆளானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை கைபற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...