விஜய்யின் சர்க்கார் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாட்டு எழுதுவது இவர்தான்!

ஜூன் 23, 2018 1069

சென்னை (23 ஜூன் 2018): விஜய்யின் சர்க்கார் படத்தில் மெர்சல் ஹிட் கூட்டணியான ஏ.ஆர்.ரஹ்மானும், கவிஞர் விவேக்கும் மீண்டும் இணைகிறார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் சர்க்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய் பிறந்த நாள் அன்று வெளியானது. இந்நிலையில் மெர்சல் படத்தின் பாடல்கள் ஹிட் ஆனதை அடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திலும் இசை அமைக்கிறார். அதேபோல மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் பாடல் எழுதி அனைவரின் பாராட்டையும் பெற்ற கவிஞர் விவேக் சர்க்கார் படத்திலும் பாடல் எழுதவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால் சர்க்கார் படத்திற்கு மேலும் எதிர் பார்ப்பு அதிகரித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...